சென்னையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – குற்றவாளிகளை கைது செய்ய நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்து திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள்,
தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்,
வழக்கறிஞர் சமூகத்தின் பாதுகாப்பிற்காக அரசும் பார்கவுன்சிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் நீதிமன்ற வளாகம் சுற்றுவட்டாரத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னையில் நடந்த வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.