திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் – உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் மருத்துவ துறையினரால் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயின் கண் விழித்திரை பாதிப்பு ஏற்பட்டு மீட்டெடுக்க முடியாத பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்பது மக்கள் மத்தியில் அறியப்படாத தகவலாகவே உள்ளது நீரிழிவு நோயினால் கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்னர் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆளுநர் PMJF லயன் டாக்டர்.H.ஷாஜகான் மற்றும்
திருநெல்வேலி லயன்ஸ் கிளப் கிளை நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல
மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் டே. லயனல்ராஜ்நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.
இதன் தொடர் நிகழ்வாக மருத்துவமனையில் மாலை இரண்டு விதமான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
உலக நீரிழிவு நோய் மூலம் கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வு காணும் வழிமுறைகளையும் உணவு பழக்கவழக்கங்களுக்கான கருத்தரங்கம் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை மருத்துவமனைமூன்றாம் தளத்திலும், தொடர்ந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான கண்கள் பாதுகாப்பு ,பராமரிப்பு கண்களில் ஏற்படும் விளைவுகள், குழந்தைகளுக்கான நவீன தொழில்நுட்பத்தில் இருந்து கண்களை பாதுகாக்க ,சத்தான உணவு பழக்க வழக்கங்களுக்கான கருத்தரங்கம் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை மருத்துவமனை இரண்டாம் தளத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை மண்டல மருத்துவ இயக்குனர் தெரிவித்தார்
மனித சங்கிலியில் , திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை,திருநெல்வேலி இதய ஜோதி நர்சிங் கல்லூரி ,மாணவ மாணவியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவ இயக்குனர், கண் விழித்திரை பிரிவு மருத்துவர்கள் ,குழந்தைபிரிவு மருத்துவர்கள் மற்றும் நிர்வாகம் மூலமாக செய்திருந்தனர்.