🔸திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றம்🔸
தமிழ்நாடு அரசு வெளியிட்ட சமீபத்திய நிர்வாக மாற்ற ஆணைப்படி,
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த திருமதி. மா.சுகன்யா அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு,
அவரது பதவிக்கு தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை அவர்கள் புதிய திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த மாற்றம் தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் நிர்வாக மாற்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.