நெல்லை அருகே துயரச் சம்பவம்: இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திக் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தையாவின் மனைவி முத்துலட்சுமி (27) இரண்டு பெண் குழந்தைகளான முத்தமிழ் (4) மற்றும் சுசீலா (3) ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான முத்துலட்சுமி, தன் இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிய பின்னர் தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மேலும் தாய் முத்துலட்சுமியின் உடலை தேடும் பணியில் கங்கைகொண்டான் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.