உலக மனநல தினத்தை முன்னிட்டு ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியான நிகழ்ச்சி நெல்லையில்
உலக மனநல தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” எனும் தியான நிகழ்ச்சி நெல்லை அருணா கார்டியாக் கேர் சென்டரில் இன்று (10.10.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருணா கார்டியாக் கேர் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் அருணாசலம், நிர்வாக இயக்குநர் டாக்டர் சுவர்ணலதா அருணாசலம் (M.E, Ph.D), விவேகானந்தா பள்ளி நிர்வாகி திரு. முருகவேல், எம்.ஜி. பில்டர்ஸ் நிர்வாகி திரு. மீனாட்சி சுந்தரம், இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் திருமதி அமுதா ராஜேந்திரன், திருமதி நாகம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், 30க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தியானத்தில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி “உலக மனநல தினம்” கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் — மனநல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மனநல பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.
இந்நிகழ்வை முன்னிட்டு, ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் மனநலப் பிரச்சினைகளை சமாளிக்க உதவும் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ எனும் இலவச தியான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியின் மூலம் வழிகாட்டுதலுடன் வெறும் 7 நிமிடங்களில் தியானம் செய்யலாம்.
தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மனஅழுத்தம், பயம், பதட்டம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைத்து, ஆழ்ந்த உறக்கம் மற்றும் மன அமைதி பெற முடியும்.
சத்குரு அவர்கள் இச்செயலி குறித்து கூறுகையில்,
> “மனம் என்பது ஒரு மகத்தான அதிசயம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அது துன்பத்தை உண்டாக்கும் கருவியாக மாறியுள்ளது. மனம் எப்படி வேலை செய்கிறது என்பதைக் கற்றுக்கொள்வது மிக முக்கியம். நீங்கள் தினமும் 7 நிமிடங்களை ஒதுக்கத் தயாராக இருந்தால், உங்கள் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறனை இச்செயலியின் மூலம் பெறலாம்,”
எனத் தெரிவித்தார்.
‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன. இதில், மனஅழுத்தம், உறவுகள், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சத்குருவின் உரைகள் இணைக்கப்பட்டுள்ளன. தியான நேரம் துவக்கத்தில் 7 நிமிடங்களாக இருந்து, விருப்பப்படி 21 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம். கண்கள் மூடியிருந்தபோதும் நேரத்தை உணர்த்தும் நினைவூட்டல் வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை இலவசமாக isha.co/mom என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.