திருநெல்வேலியில் இன்று மாலை பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதிகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
தகவலின்படி, இன்று மாலை நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் அருகிலுள்ள சோதனை சாவடி பகுதிகளை நோக்கி பெட்ரோல் குண்டுகளை எறிந்து தப்பிச் சென்றுள்ளனர். திடீர் சம்பவத்தால் காவல் நிலையம் சுற்றிய பகுதி சில நிமிடங்கள் பரபரப்பாக மாறியது.
இதுகுறித்து போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளனர்.
மேலும், பெட்ரோல் குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் எங்கு வாங்கப்பட்டது என்பதை அறிய, போலீசார் திருநெல்வேலி நகரிலுள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இதே நேரத்தில், மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களிலும் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு திருநெல்வேலியில் இருந்து வந்த தடவியல் நிபுணர்கள் வந்து ஆய்வுகள் நடத்தி, முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
இன்று மாலை நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திருநெல்வேலி முழுவதும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது