திருநெல்வேலி, ஆக. 10:
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சில பணக்காரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வழக்கறிஞர்-சமூக ஆர்வலர் செ. மாதவன், இந்த விவகாரத்தை வீடியோ ஆதாரத்துடன் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் மனுவாக அனுப்பியுள்ளார்.

முன்பு அனைவருக்கும் திறந்திருந்த இந்த அருவி, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிறகு, காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்கப்படும் விதிமுறைக்கு வந்தது. ஆனால், ஆக. 9-ம் தேதி இரவு, சிலர் பணம் கொடுத்து சொகுசு வாகனங்களில் நேரடியாக அருவிக்கு சென்றதாக வீடியோவில் தெளிவாக உள்ளது.

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் – பணக்காரர்களுக்கு வேறு சட்டமா? என்ற கேள்வி இப்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *