திருநெல்வேலி: உடன்குடி கிறிஸ்டியா நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் பிரபு, டாட்டா நிறுவனத்தின் ஹெக்ஸா எக்ஸ் டி (HEXA XT) மாடல் புதிய நான்கு சக்கர வாகனத்தை திருநெல்வேலியில் உள்ள அரிஸ்டா ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வாங்கிய ஒருமாதத்திலேயே வாகனத்தில் இன்ஜின் ஓவர்ஹீட், சீட் பிரச்சனை, மெதுவான வேகத்தில் கியர் பாக்ஸ் கோளாறு, ஏசி ப்ளோ மற்றும் இன்ஜின் ஹீட்டர் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டதால் பலமுறை பழுது பார்த்தும் அதே கோளாறுகள் மீண்டும் ஏற்பட்டன மேலும் புதிய வாகனத்தில் இருந்த இயல்பான எக்ஸாம் கியர் பாக்ஸுக்கு பதிலாக ரிகான் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர் கோளாறு நீங்காததால் உடன்குடியிலிருந்து பலமுறை திருநெல்வேலிக்கு பயணம் செய்து நேரமும் பணமும் வீணானதாக வழக்கறிஞர் பிரம்மா மூலமாக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் நிர்வாக காரணத்தால் வழக்கு திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் பி.சண்முகப் பிரியா தலைமையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் வாகனத்தில் உள்ள கியர் பாக்ஸை இயல்பான ஸ்டராம் கியர் பாக்ஸாக மாற்றவும் தேவையற்ற பயணச் செலவுக்காக ரூ.60,000 வழங்கவும் மன உளைச்சல் மற்றும் பொருளாதார சிரமங்களுக்கு ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்கவும் உற்பத்தி நிறுவனம் தனியாக ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்கவும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 வழங்கவும் இந்த உத்தரவைப் பெற்ற 45 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டும் தவறினால் வருடத்திற்கு 9% வட்டியுடன் தொகை வசூலிக்கப்படும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது