நெல்லை மாவட்ட சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட அணி தேர்வு
திருநெல்வேலி, ஆக. 10 –
மதுரையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பூப்பந்தாட்ட பட்டயப் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட சப்-ஜூனியர் அணி வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக உதவி செயலர் பி. வெள்ளைப்பாண்டியன் வெளியிட்ட தகவலில், மாவட்டங்களுக்கு இடையேயான மாநில பூப்பந்தாட்ட பட்டயப் போட்டிகள் மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.இதில் பங்கேற்கும் ஆண்கள் அணியில் கூடங்குளத்தைச் சேர்ந்த சிரீஹரீஷ், நிஷாந், இசக்கிமுத்து, ஆம்ஸ்ட்ராங், பிரவின்குமார், சிவபாலன், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் பயாஸ், சங்கர்நகரைச் சேர்ந்த கொம்பையா வசந்த், காந்திநகரைச் சேர்ந்த சஞ்சீவ், சேவியர்காலனியைச் சேர்ந்த முகுந்த ரூபன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.பெண்கள் அணியில் கூடங்குளத்தைச் சேர்ந்த இலக்கிய சக்தி, தேஜாசிரீ, யாசினி, ஆசிகா, சுருதிகா, ரிதிகா, சேவியர்காலனியைச் சேர்ந்த ரோஸ்லின் டெலிஸ், சங்கர்நகரைச் சேர்ந்த ஜெலினா, சிங்கம்பாறையைச் சேர்ந்த சகாய மெர்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த மதுமிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அணிகளுக்கு பயிற்சியாளர்களாக சித்திரைச் செல்வன், சுப்பையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.