திருநெல்வேலியில் கோவில் இடிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில், ஸ்ரீ உச்சிபிள்ளையார் திருக்கோவில் மற்றும் வ.உ.சி நகர் ஸ்ரீ சாந்த விநாயகர் திருக்கோவில் ஆகியவற்றை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அகற்ற முயற்சிக்கும் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, இந்து முன்னணி, வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பங்கேற்றன.
அதிமுக கல்லூர் இ.வேலாயுதம் தலைமையிலும், பாஜக வடக்கு மாவட்ட பொது செயலாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை N.கணேசராஜா, இந்து முன்னணி கோட்ட செயலாளர் பிரமநாயகம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவில்களை இடிக்காதீர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.