ஆவின் பால் பண்ணைக்கு செல்லும் குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியின் இரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
எஸ்டிபிஐ கட்சியின் இரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது, மாவட்ட செயலாளர் சேக் தாவுத் வரவேற்புரை ஆற்றினார், எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி முன்னிலை வகித்தார், கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பக்கீர் முகம்மது லெப்பை,சல்மான், கோட்டூர் முஸ்தபா கலந்து கொண்டனர், கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் மூலம் விரைந்து திறக்க வேண்டும்.
மேலப்பாளையம் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது இதன் மூலம் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது ஏற்கனவே மேலப்பாளையம் மண்டலத்தில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு உள்ளாகி வருக்கின்றனர் ,
ஆவின் பால்பண்ணைககு செல்லும் குடிநீர் குழாய் ரெட்டியார் பட்டி சாலையில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீனாகிறது உடைப்பு சரிசெய்யப்ப்டாலும் 30வருடங்களுக்கு முன்பு பதித்த குழாய்கள் என்பதால் தொடர்ந்து உடைந்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் டவுண் சல்மான் நன்றி உரை ஆற்றினார்.