நெல்லை: ஆய்வுக்கு சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – உயர் அதிகாரி மீது வழக்கு

நெல்லை, ஆக. 10 –

திருநெல்வேலி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன் மீது தொடர் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊழியர் ஒருவரின் புகார் மீது விசாரித்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணைக்கு வர முடியாது என்று தெனாவட்டாக மறுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனராக இருப்பவர் இலக்குவன் (56). இவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி களக்காடு அருகே உள்ள வட்டார இ சேவை மையத்திற்கு சென்ற இலக்குவன் அங்கு பணியில் இருந்த 20 வயது இளம் பெண்ணான பாலின வள மேலாளரிடம், குடும்பத்தைப் பற்றி விசாரித்ததோடு அவரது கல்விக்கு உதவுவதாக கூறி ஆசை காட்டி அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சித்துள்ளார் அவரிடம் இருந்து தப்பிய பெண் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது களக்காடு காவல் நிலையத்தில் இலக்குவன் மீது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி விசாரித்த போது, ” நான் கலெக்டருக்கு அடுத்த ‘ரேங்’கில் உள்ளவன். இதுபோன்ற விசாரணைக் எல்லாம் காவல் நிலையம் வர முடியாது என்று ஆணவமாக மறுத்துள்ளார்.

இலக்குவன் மீது இது போன்ற புகார்கள் இதற்கு முன்பும் எழுந்ததாகவும் உயர் அதிகாரிகள் அதை மூடி மறைத்ததாகவும் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் ஒரு துறை சார்ந்த அலுவலர் மீது குற்றச்சாட்டு வந்தால் அங்குள்ள விசாகா குழு மூலம் விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு விசாரிக்க தவறினால் உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *