சிவகாசி அருகே தேவர் சமூக இளைஞர் வெட்டி படுகொலை – குற்றவாளிகள் தேடலில் போலீசார் — விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது கணேஷ் பாண்டி என்ற இளைஞர், நள்ளிரவில் மர்ம கும்பல் தாக்குதலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துக்கு பிறகு குற்றவாளிகள் தப்பியோடிய நிலையில், அவர்களை விருதுநகர் மாவட்ட காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணேஷ் பாண்டியின் அண்ணனும் கும்பல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தம்பியையும் இழந்ததால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.