ஆந்திர சித்தூரில் மருது பாண்டியர் சிலைகள் திறப்பு
ஆந்திரப் பிரதேசம், சித்தூர்:
தமிழகத்தின் வீரமரபைச் சிறப்பிக்கும் வகையில் சின்ன மருது – பெரிய மருதுவின் சிலைகள் இன்று (13.08.2025) ஆந்திர மாநிலம் சித்தூரில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, சமூகப் போராட்டங்களில் ஆர்வமுள்ள சித்தூர் சிங்கம் என அழைக்கப்படும் அண்ணன் ‘புல்லட்’ சுரேஷ் அவர்களின் முயற்சியால் நடை பெற்றது.
விழாவில் உள்ளூர் மக்கள், தமிழர் சங்க உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பங்கேற்று மருது பாண்டியர் சகோதரர்களின் வீரச் செயல்களை நினைவுகூர்ந்தனர். சிறப்புரையாற்றியவர்கள், இவ்விழா தமிழகத்துக்கும் ஆந்திரத்துக்கும் இடையிலான கலாசார, வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகும் என பாராட்டினர்.
மருது பாண்டியர் சகோதரர்களின் தியாகச் செயல்கள் இந்நிலப்பகுதியின் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வீர உணர்வை ஊட்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.