பிரியாணி அபிராமி – குழந்தைகள் கொலை வழக்கில் மேல்முறையீடு, உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு நோட்டீஸ்
2018-ஆம் ஆண்டு குன்றத்தூர் பகுதியில் தனது காதலன் மீனாட்சிசுந்தரத்துடன் சேர்ந்து இரு குழந்தைகளான மகள் கர்ணிகாவையும் மகன் அஜயையும் கொலை செய்த வழக்கில், சமூக வலைதளங்களில் “பிரியாணி அபிராமி” என அறியப்படும் அபிராமிக்கும், அவரது காதலனுக்கும் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் சாகும் வரை வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது. வழக்கில், அபிராமி முதலில் மகளுக்கு விஷமூட்டிய பாலை கொடுத்து உயிரிழக்கச் செய்ததும், பின்னர் மகனை தூக்குத்துண்டால் மூடி கொன்றதும் நிரூபிக்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு காதலனுடன் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அபிராமி மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.