திருநெல்வேலியில் அமித்ஷா வருகைக்கான பாதுகாப்பு – ஹெலிகாப்டர் ஒத்திகை பரபரப்பு
நெல்லை மாவட்டத்திற்கு வரும் 22ஆம் தேதி பாஜகவின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. மாநகர பகுதிகளில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் காரணமாக மக்கள் மத்தியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.