நெல்லையில் அமித்ஷாவுக்கு தயாராகும் தேநீர்
திருநெல்வேலி: நாளை நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தனியார் விமானத்தில் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்க உள்ளார். அங்கிருந்து வாகனத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்துகொள்வார்.
இந்த தேநீர் விருந்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை பாரம்பரிய சுவையோடு தேநீர் பரிமாறப்பட உள்ளது என்றும், தேநீரோடு சில சிற்றுண்டிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக, இன்றே வாகனங்கள் சென்று நிற்கும் ஒத்திகையும், வீட்டில் விருந்துக்கு தேவையான ஏற்பாடுகளும் அதிகாரிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டன.
பின்னர் அங்கிருந்து நேரடியாக மாநாடு நடைபெறும் மைதானத்திற்கு அமித்ஷா செல்ல உள்ளார். இந்நிலையில், “அமித்ஷா நெல்லையில் டீ அருந்தப் போகிறார்” என்ற தகவல் நகரம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.