திருநெல்வேலியில் அரசு பேருந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்
திருநெல்வேலியில் இருந்து தெற்குச் செழியநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.
மானூர் அருகே ஆளவந்தான் குளம் பகுதியை அடைந்தபோது, சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அதனை தவிர்க்கும் முயற்சியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கிடங்கில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ராஜா உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் முதலில் மானூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.