ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவசுந்தர்ராஜன் (39), தனியார் பணி செய்து வருபவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணி வாங்கித் தருவதாக கூறி உதவி பேராசிரியர் பாலகுமார், இவரிடமிருந்து ரூ.20 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
வேலை வழங்காமல், பணமும் திருப்பி தராத நிலையில், சிவசுந்தர்ராஜன் இன்று பணம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது பாலகுமார் அரிவாளால் தாக்கியதில், சிவசுந்தர்ராஜனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.