நெல்லை மகராஜநகரில் உள்ள ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த நல்ஆசிரியர் விருது
நெல்லை மகராஜநகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல் நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்களுக்கு, 05.09.2025 அன்று நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் துணை முதல்வர், மாநில கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் “சிறந்த நல்ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கப்பட்டதன் மூலம், தனது தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாது, தனது பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக திருமதி ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்கள் தெரிவித்தார். மேலும், கல்வி துறையில் தன்னுடைய பங்களிப்பு இவ்வாறு அரசின் அங்கீகாரம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகவும், எதிர்காலத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
- இந்த விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.