திருநெல்வேலியில் சைபர் குற்றச்செயல்கள்: 9 மாதங்களில் ரூ.5.41 கோடி இழப்பு

திருநெல்வேலி நகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலின்படி, 2025 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 28 வரை மொத்தம் 507 நிதி மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், மொத்தமாக ₹5,41,19,593 (ரூ. 5.41 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் போலீசார் நடவடிக்கை எடுத்ததில், ₹75,84,339 (ரூ. 75.84 லட்சம்) மோசடி கணக்குகளில் முடக்கப்பட்டுள்ளதுடன், ₹92,91,648 (ரூ. 92.91 லட்சம்) பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த காலகட்டத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 399 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

👉 பொதுமக்கள் சைபர் மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கையுடன் இருந்து, சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை உடனடியாக 1930 என்ற தேசிய ஹெல்ப்லைன் எண் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *