வீரம், திறமை, சாதனை – நெல்லை காவல் துறையின் பெருமை! 📄 நியூஸ்:

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த டவுண் போக்குவரத்து தலைமை காவலர் HC 532 திரு. சுந்தரமூர்த்தி அவர்கள், 300 மீட்டர் தூரத்திற்கான தோன்றி மறைதல் (Snap Target) துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் HC 931 திரு. சாலை சந்துரு அவர்கள், 300 மீட்டர் தூரத்திற்கான நிலையான துப்பாக்கி (இன்சாஸ்) சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். மேலும், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு. அஞ்சூர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. பார்த்திபன், தலைமை காவலர் HC 532 திரு. சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்ற தென்மண்டல அணி பிரிவு ஓட்டுமொத்த ரைபில் பிரிவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேற்படி பதக்கம் மற்றும் Shield வென்ற காவல் துறையினரை, இன்று (08.08.2025) நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு. சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (மேற்கு) Dr. V. பிரசண்ணகுமார் இ.கா.ப., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. S. விஜயகுமார், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. டேனியல் கிருபாகரன், டவுண் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *