பரிதாப நிலையில் செய்துங்கநல்லூர் தபால் நிலைய கட்டிடம் – பொதுமக்கள் உயிர் அச்சத்தில்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் செயல்பட்டு வரும் மாவட்ட துனை தபால் அலுவலகம் தற்போது பரிதாபகரமான நிலையிலும், ஆபத்தான சூழலிலும் உள்ளது.
வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் மற்றும் பார்சல்கள் இங்கிருந்து கிளை தபால் நிலையங்கள் வழியாக பொதுமக்களிடம் சென்று சேர்கின்றன. தினசரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இத்தபால் நிலையத்திற்கு வருகை தருகின்றனர்.
ஆனால், இந்த கட்டிடம் எப்போது கட்டப்பட்டது என்ற தகவல் தெரியாத நிலையில், தற்போது அதன் சுவர்கள், சிமெண்ட் பூச்சுகள், கான்கீரீட் பகுதிகள் அடிக்கடி மேலிருந்து பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், பணியாற்றும் ஊழியர்களும் உயிர் அச்சத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உடனடியாக இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் அமைக்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசவப்பபுரத்தை சேர்ந்த மு. கணேசன் பதிவு செய்துள்ளார்.
பதிவு தேதி : 09.08.2025