சென்னையில் லீ ராயல் மெறிடியன் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ சோதனை
சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் லீ ராயல் மெறிடியன் மற்றும் அதன் உரிமையாளர் பெரியசாமி வீடு ஆகிய இடங்களில் இன்று (12 ஆகஸ்ட் 2025) காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தாரணி பைனான்ஸ், தாரணி டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடனான நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சில ஆவணங்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள வீட்டிலும், ஹோட்டல் வளாகத்திலும் ஒரே நேரத்தில் தொடங்கிய இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி தரவுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.