சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1½ நாட்கள் கார் பார்க்கிங் – ₹1,585 வசூல்: பயணிகள் அதிர்ச்சி

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1½ நாட்கள் (சுமார் 36 மணி நேரம்) கார் நிறுத்தியதற்காக ₹1,585 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ரசீதில் “PARKING CHARGES: ₹1,585” என குறிப்பிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ரயில் நிலையங்களில் கார் பார்க்கிங் கட்டணம் குறைவாகவே இருக்கும் நிலையில், இவ்வளவு அதிக தொகை வசூலிக்கப்பட்டது குறித்து மக்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். பார்க்கிங் கட்டண விவரங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து தெளிவான தகவலை வெளியிடுமாறு பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *