நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் (80) – சென்னை T.நகரில் உள்ள தனது இல்லத்தில் சுமார் எட்டு நாட்களுக்கு முன்பு திடீரென கீழே விழுந்ததால், உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தஞ்சாவூரைச் சேர்ந்த இல.கணேசன், 16 பிப்ரவரி 1945 அன்று பிறந்தவர். RSS பிரச்சாரகராக பணியாற்றிய இவர், பின்னர் பாஜகத்தில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். 2016 முதல் 2018 வரை மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராகவும், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 2023 பிப்ரவரி 20 முதல் நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்த இவர், நாளை அவரது உடல் அடக்கம் நடைபெறும் நிலையில், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் மரியாதை செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *